Saturday, 3 May 2014

இயக்குனர் சாமி படத்தின் ஹீரோயினிக்கு விபரீத ஆசை!

வி ஹவுஸ் ப்ரொடக்‌ஷன் நிறுவனம் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் படம் ‘கங்காரு’. இந்த படத்தினை இயக்குனர் சாமி இயக்குகிறார். பாடலாசிரியர் ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். சில மாதங்களுக்கு முன் படத்தின் பாடல் வெளியிடப்பட்டது. பாடல் நல்லதொரு வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் நாயகனாக அர்ஜூனா நடிக்கிறார். நாயகிகளாக நடிகை பிரியங்கா மற்றும் வர்ஷா அஷ்வதி நடிக்கிறார்கள். அண்ணன்,தங்கை உறவின் பாசத்தை வைத்து இந்த படம் உருவாகிறது.

இந்த படம் கொடைக்கானல் பகுதியில் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. ஆபத்தான மேட்டுப் பகுதியில் தான் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த படத்தின் நாயகி பிரியங்காவிற்கு ஒரு விபரீத ஆசை ஏற்பட்டது. அந்த ஆசையினை இயக்குனரிடம் தெரிவித்துள்ளார். அவரும் சம்மதம் தெரிவிக்க அந்த ஆசையும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்த ஆசை என்னவென்றால், படப்பிடிப்பு தளத்தில் கேமரா வைக்க பயன்படுத்தப்படும் 60 அடி ராட்சத கிரேனில் ஏறி பள்ளத்தாக்கினை பார்க்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். தைரியமாக அந்த கிரேனில் ஏறி அமர்ந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
 
இந்த நடிகையின் தைரியத்தை நிச்சயமாக பாராட்டியே ஆக வேண்டும்

Monday, 28 April 2014

நம் நாட்டில் தியாகத்துக்கு என்ன மரியாதை? சகாயம் ஐ.ஏ.எஸ் பேச்சு!

சென்னை, மனுஸ்ரீ பிலிம் இண்டர் நேஷனல் தயாரிப்பில் மனுக் கண்ணன் இயக்கியுள்ள படம் 'அங்குசம்'.

காதலையும் வன்முறையையும்  பிரதானமான கருப் பொருளாக்கி உருவாகி வரும் படங்கள் மத்தியில் 'தகவல் அறியும் சட்டம்' பற்றிய விழிப்புணர்வு நோக்கில் உருவாகியுள்ள முதல் தமிழ்ப்படம் தான் 'அங்குசம்'

ஊடகங்களுக்காக நேற்று ஆர்.கே.வி. ஸ்டுடியோ திரையரங்கில் 'அங்குசம்' திரையிடப்பட்டது. திரையீடு முடிந்த பிறகு புதுமை நிகழ்வாக அங்குசம் படக்குழுவினர் பெருமையுடன் வழங்கும் 'தெரிந்த வீரர்கள் தெரியாத விவரங்கள்', என்கிற இந்திய விடுதலை வீரர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்பேடு வெளியீட்டு விழா நடந்தது.

இதில் சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள் கலந்துகொண்டு இந்நூலினை வெளியிட்டார். ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் கிறிஸ்டினா சாமி பெற்றுக் கொண்டார். இன்னொரு சிறு நூலான சேவை பெறும் சட்டம் நூலையும்  சகாயம்  வெளியிட பத்திரிகையாளர் தமிழன்பன் பெற்றுக் கொண்டார்.

விழாவில் இயக்குநர் மனுக்கண்ணன் அனைவரையும் வரவேற்றுப் பேசுகையில், "நான் பொறியியல் மற்றும் மேலாண்மை முதுகலைப் பட்டதாரி.  துபாயில் உயரதிகாரியாக  நல்லவேலை பார்த்து வந்தேன்.  எங்களுக்கு 11 ஆண்டுகளாக குழந்தை இல்லை. எனவே சென்னை வந்து எழும்பூர் கில்டு ஆப் சர்வீஸில் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துக் கொண்டு வளர்த்தோம். வானம்பாடிகள் போல வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது. கடவுள் என்ன நினைத்தாரோ நான்கே ஆண்டுகள்தான் எங்கள் மகள் மனுவை எடுத்துக் கொண்டார். என்ன இருந்தும் மனுவை எங்களால் காப்பாற்ற முடியவில்லை. நானும் என் மனைவியும் உடைந்து போய்விட்டோம். எல்லாம் அவ்வளவுதானா இனி ஒன்றுமே இல்லையா என்று தோன்றியது. இந்தியா திரும்பினோம்.

சில பத்திரிகை செய்திகள் எங்களைச் சிந்திக்க வைத்தது. தகவல் உரிமைச்சட்டம் பற்றி திருச்சி வாலிபர் ஒருவர் சந்தித்த போராட்டத்தை அறிந்தோம்,

மகள் பெயரில் ஒரு டிரஸ்ட் ஆரம்பித்தோம் நாம் ஏன் 'தகவல் அறியும் சட்டம்' பற்றி மக்களுக்கு விழிப்பு ஏற்படுத்தக் கூடாது என்று நினைத்தோம்.நான் சினிமாக்காரனும் இல்லை. சினிமா தொடர்பும் இல்லாதவன்.  படம் எடுக்க முடிவு செய்தோம். அப்படி உருவானதுதான் 'அங்குசம்'

என் மகள் பெயர் மனு. அப்பா பெயர் கண்ணன். இரண்டையும் இணைத்துதான் மனுக்கண்ணனானேன். படம் இயக்கினேன்.

இந்தப படத்தினால் பல பிரச்சினைகள். அதுபற்றி இப்போது பேச விரும்பவில்லை. வரிவிலக்கிற்காக போராடிப் பெற்றோம்.

61 வது திரைப்பட விருதுகளுக்கு அனுப்பினோம். கிடைக்க வில்லை. பிறகு கேள்விப் பட்டோம். படம் தீவிரவாதம் பேசியது என்றார்களாம். இது தேசிய வாதம் தான் பேசியது. இவ்விழாவில் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்று வழிகாட்டி வரும் சகாயம் அவர்கள் நூலினை வெளியிடுவதில் மகிழ்ச்சி. நன்றி. ஊடகங்கள் தான் 'அங்குசம்'படத்தை மக்களிடம் கொண்டு சென்றன. இனியும் கொண்டு சேர்க்கும்." என்று தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சியின்  மாநில அமைப்பாளர்கிறிஸ்டினா பேசுகையில், "இது எத்தனை தடைகள் பிரச்சினைகள் எல்லாம் தாண்டி வந்துள்ளது.  'அங்குசம்' படத்தின் பயணத்தில் நாங்களும் உடன் இருந்திருக்கிறோம் மகிழ்ச்சி. இந்த நாட்டை ஊழல் வாதிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று போராடும் சகாயம் அவர்களுடன் இங்கே அமர்வதில்  பெருமைப் படுகிறேன்." என்றார்.

ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் பேசும் பேசுகையில், "இங்கே இந்த நூல் வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன். நேர்மையான கருத்தை இந்த சமூகத்தில் விதைக்க முடியுமா என்று மனுக்கண்ணன் கொண்டு வந்திருக்கிறார். அவரை நான் பாராட்டுகிறேன்.

லஞ்சம் என்பது எழைகளுக்கு எதிரானது, பண்பாட்டுக்கும் நாகரிகத்துக்கும்  விரோதமானது, தேசத்துக்கு தடையானது.

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 சாதாரண மக்கள் கையில் கிடைத்துள்ள அசாதாரண ஆயுதம் என்று கருதுகிறேன். அதைப் பற்றி 'அங்குசம்'படமெடுத்துள்ள இயக்குநர் மனுக்கண்ணன்   நிச்சயம் வெற்றியடைய வாழ்த்துகிறேன். நம்நாட்டு தேச விடுதலைக்கு பாடுபட்டவர்களை நாம் எப்படி மதிக்கிறோம்? என்ன தெரிந்து கொண்டு இருக்கிறோம்.?

இந்த சமுதாயத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று தாகத்தோடும் வேகத்தோடும் வருகிற இளைஞர்கள்,படைப்பாளிகள், முதியவர்கள்  பலரை சந்தித்திருக்கிறேன்.

மதுரையில் நான் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது மனுநீதி நாள் அன்று திங்கள் கிழமை மக்களிடம் மனுக்கள் வாங்குவதுண்டு. பல ஊர்களிலிருந்து தொலை தூரத்திலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள். அப்படி ஒரு நாள் மதிய உணவு கூட உண்ணாமல் 3,4 மணிவரை வாங்கினேன். முடித்துவிட்டு வெளியே வந்த போது ஒரு 45 வயதுக்காரர் அழுக்குச்சட்டை கைலியுடன் வந்தார். 10 நாள் பட்டினி கிடந்த சோர்வுடன் இருந்தார். முன்பே வரவேண்டியது தானே என்றேன். கூட்டமாக இருந்தது ஐயா என்றார். எங்கே இருந்தீர்கள் என்றேன். இங்குதான் இருந்தேன் என்றார். நீங்கள் யார் என்றேன். நான் வ.உ.சி.யின் பேரன் என்றார். நான் அதிர்ந்தேன். நான் வ.உ.சி.யின் பேரன் என்றுசொல்ல வேண்டியதுதானே என்றேன். .. காவலர்கள் உள்ளே விடவில்லை என்றார். உனக்கு இங்கே நிற்க உரிமை வாங்கிக் கொடுத்தது என் பாட்டன் தான் என்று சொல்ல வேண்டியதுதானே?என்றேன்

என்ன செய்கிறீர்கள் என்றேன். அவ்வளவு வறுமையில் இருந்தார். கட்டடங்களுக்கு பெயிண்ட் அடிக்கிறோம் என்றார். அப்படி பெயிண்ட் அடித்ததில் கீழே விழுந்து சகோதரருக்கு அடிபட்டு காயமாகி முடியாமல் இருக்கிறார் உதவுங்கள் என்றார். திருமணம் கூட செய்யவில்லை. நான் உடனடியாக மதுரை மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட உழவர் உணவகம் தொடங்க கடன் அனுமதித்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கினேன்.

வெள்ளையனுக்கு எதிராக சுதேசிக்கப்பல் விட்டவர் வ.உ.சி. இரட்டை ஆயுள் தண்டனை பெற்றவர். கையிலும் காலிலும் விலங்குகள் போடப்பட்டு செக்கிழுத்தவர். அப்போது குடும்பத்தினர் வைத்த கோரிக்கை என்ன தெரியுமா? அவர் செக்கிழுக்கட்டும் கை கால் விலங்குகளை கழற்றி விட்டு இழுக்கச் செய்யுங்கள் என்பது தான். அவரது குடும்பமே வக்கீல் குடும்பம். அவரது குடும்பத்துக்கு வந்த நிலையைப் பாருங்கள். இதுதான் தியாகிகளின் நிலைமை.என் தேசம் விடுதலை பெற்று 67 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதன் மலர்ச்சி வளர்ச்சி என்று மார் தட்டுகிறோமே இதன் பலனை யார் அனுபவிக்கிறார்கள். இந்தக் கேள்விக்கு பதில் என்ன ?

நான் நாமக்கல்  மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது மனுநீதி நாள் மக்களிடம் மனுக்கள் வாங்கியபோது  உமாராணி என்கிற ஒரு பெண்மணி உதவி கேட்டார்.42 வயதிருக்கும்.என் தந்தையின் தகுதிக்கு ஏற்றமாதிரி உதவுங்கள் ஐயா என்றார். தந்தையின் தகுதி என்றால் உங்கள் தந்தை யார் என்றேன். அவர் பாண்டமங்கலம் தர்மலிங்கம் பிள்ளை என்றார். தர்மலிங்கம் பிள்ளை சுதந்திரப் போராட்டவீரர். போராட்டத்தில் ஈடுபட்டதால் சொத்துகளை இழந்தவர்.

அவருக்கு உடனடியாக என்னால் உதவ முடியவில்லை. வட்டாட்சியரைக் கேட்டேன். முடியாது விதிகள் இல்

தேசத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தியாகிகள் வரலாறுகளை எடுத்துச் சொல்லுங்கள் இந்த தேசத்தில் 1999-2005 ல் 25 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் இது நம் உணவுக்கு பயிரிடும் விவசாயிகள் நிலை. 

நம் நாகரிகம் பண்பாட்டை காக்கும் நெசவாளர்கள் வறுமையில் இருக்கிறார்கள். கோ ஆப் டெக்ஸ் இயக்குநராக இருக்கிறேன். இப்போது கண்டாங்கி சேலை மீட்டுருவாக்கம் திட்டத்தை செய்கிறோம். 3 மாதங்களுக்கு முன் காரைக்குடி சென்றேன். அங்கு அவ்வளவு வறுமை. பல வீடுகளுக்கு கதவுகள் இல்லை. கதவுகள் போட முடியாத அளவுக்கு அவ்வளவு வறுமை. இங்கு  என்ன இருக்கிறது எடுத்துச் செல்ல என்கிறார்கள். எவ்வளவு வேதனை? என் தேசம் விடுதலை பெற்று பலனை யார் அனுபவிக்கிறார்கள்?. இந்தக் கேள்விக்கு பதில் தேடவும்  கேள்வி எழுப்பவும் அங்குசம் உதவும்."  இவ்வாறு சகாயம் ஐ.ஏ.எஸ் பேசினார். (டி.என்.எஸ்)
லை என்றார். ஏன் என்றேன். சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுக்கு 25 வயது வரைதான் உதவித்தொகை கிடைக்கும் என்றார். அதுதான் சட்டம்? நமக்கு சுதந்திரம்  வாங்கிக் கொடுத்தவர்களுக்கே உதவாத சட்டம் என்ன பெரிய சட்டம்? அதை மாற்ற வேண்டும் என்று போராடி தமிழக அரசு தலைமை செயலகத்துக்கு எழுதி கருத்துரு பெற்று சிறப்பு இனமாக கருதிட எழுதினேன். 5 ஆயிரம் பெற உதவினேன்  ஐயா என்று உதவி கேட்ட உமாராணி இப்போது அண்ணா என்கிறார். என்னைப் பார்க்க சென்னை வருவதாகக் கூறினார். நானே நேரில் போய் அவரைப் பார்த்த போது அவருக்கு இரு கண்பார்வையும் போய்விட்டதை அறிந்த போது வேதனைப்பட்டேன்.

ராகுல் பேச்சால் ஜெயசுதா - விஜயசாந்திக்கு முதல்வர் கனவு!!

ஐதராபாத்,காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சால், தெலங்கானாவில் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஜெயசுதா விஜயசாந்தி
 உள்ளிட்டோர் முதல்வர் கனவு காணத் தொடங்கி உள்ளனர்.

ராகுல் காந்தி, கடந்த 2 நாட்களுக்கு முன் தெலங்கானா பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், தெலங்கானாவை வழங்கியது காங்கிரஸ் கட்சிதான். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், புதிதாக உதயமாகும் தெலங்கானா மாநிலத்தில், ஒரு பெண் தான் முதல்முறையாக முதல்வர் பதவி வகிக்க வேண்டும் என்பது எனது விருப்பம் என பகிரங்கமாக அறிவித்தார். இதனால் மேடையில் இருந்த மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர்.

இந்நிலையில் தெலங்கானா மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் களத்தில் உள்ள நடிகைகள் ஜெயசுதா, விஜயசாந்தி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் கீதா ரெட்டி, டி.கே. அருணா, சுனிதா லட்சுமி ரெட்டி ஆகியோர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஏற்கெனவே தெலுங்கு தேசம் கட்சி, முதல்வர் வேட்பாளராக பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஆர். கிருஷ்ணய்யாவை அறிவித்துள்ளது. டி.ஆர்.எஸ். கட்சி சார்பில் தலித் ஒருவரை முதல்வர் ஆக்குவோம் என்று அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியோ பெண்களை கவரும் வகையில் பெண் முதல்வர் என அறிவித்துள்ளது.

தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், அடுத்த முதல்வர் யார் என்று அக்கட்சியிலும், பொது மக்களிடையேயும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மோடி எங்கள் குடும்பத்தில் ஒருவர்: லதா ரஜினிகாந்த் பேட்டி!

Monday 28 April 2014
சென்னை,பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கடந்த 13_ந் தேதி சென்னைக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். 

இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மோடி தன்னை சந்தித்தது பற்றி ரஜினிகாந்திடம் கேட்ட போது, ''மோடி எனது நெருங்கிய நன்பர் அந்த வகையில் என்னை சந்தித்தார்'' என்று கூறினார்.
இது தொடர்பாக ரஜினிகாந்தின் மனைவி லதா பேட்டி அளித்துள்ளார். 

ரஜினி_மோடி சந்திப்பு குறித்து அவரிடம் கேட்டபோது, ''நரேந்திரமோடி ரஜினியின் மிக நெருங்கிய நன்பராவார். ரஜினிகாந்த் உடல் நலம் இல்லாமல் ஆஸ்பத்திரியில் இருந்தபோது மோடி நேரில் வந்து பார்த்தார். இப்போது அவர் எங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து எங்களை சந்தித்தது உள்ளார். இதனால் நாங்கள் அவரை எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருதுகிறோம். அவர் எங்கள் வீட்டுக்கு வந்து எங்களை கவுரவபடுத்தி விட்டார்'' என்று கூறினார். 

24_ந் தேதி ஓட்டு பதிவின்போது ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லாமேரி கல்லூரியில் முதல் ஆளாக சென்று ஓட்டு போட்டார். இதுபற்றி லதாவிடம் கேட்டபோது ''ரஜினி முதல் ஆளாக சென்று ஓட்டுபோட்டதற்கு எந்த திட்டமும் இல்லை. அவர் எப்போதும் காலையிலே சென்று காத்திருந்து ஓட்டு போடுவார். அன்றும் அதேபோல் முன்கூட்டி சென்றார். அவர் முதல் ஓட்டு போடும் நிலை ஏற்பட்டது. ஆனால் அது தற்செயலாக நடந்தது'' என்று கூறினார். 

வருகிற 9_ந் தேதி வெளியாக உள்ள ரஜினியின் கோச்சடையான் படம் பண முடையால் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவியது. இது பற்றி அவரிடம் கேட்டபோது, ''படம் வெளியாவதில் எல்லாமே நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. நான் முதல் நாளில் முதல் காட்சியை ரசிகர்களோடு அமர்ந்து பார்க்க உள்ளேன். இது எனக்கு சிறப்பான தருணம்'' என்று கூறினார்.

முதல்வர் ஜெயலலிதா கோடநாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்!

Monday 28 April 2014
சென்னை,தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று கோடநாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற வேட்பாளர்கள் முதலமைச்சரை உற்சாகத்துடன் வழியனுப்பி வைத்தனர்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று காலை தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து கோடநாடு புறப்பட்டார். விமான நிலையத்தில் தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், பா.வளர்மதி உள்ளிட்ட அமைச்சர்களும் மதுசூதனன், தம்பிதுரை உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகளும், ஜெயவர்தன், எஸ்.ஆர்.விஜயகுமார், வெங்கடேஷ் பாபு, வேணுகோபால், திருச்சி குமார், கே.என். ராமச்சந்திரன் உள்ளிட்ட மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர்களும், ஏராளமான அதிமுகவினரும் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். 

தனி விமானம் மூலம் கோவை சென்ற ஜெயலலிதாவை அந்த மாவட்ட அதிமுக நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோட புறப்பட்டுச் சென்றார். கோடநாட்டில் சில நாட்கள் தங்கியிருந்து அரசு பணிகளை மேற்கொள்வார் என அரசு தரப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.